காலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது ஆடுகளத்தின்
தரம் மிகவும் மோசமாக இருந்தது என்று கூறி சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம்
இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு ஒரு அதிகாரபூர்வமான எச்சரிக்கையை
அனுப்பியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஆடுகளங்கள் தொடர்பான அலோசகர் ஆண்டி அட்கின்சன் காலி மைதான ஆடுகளத்தை ஆய்வு செய்த பிறகு, அதை சரி செய்வதற்கு தேவையான அலோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்குவார் என்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் அறிக்கை கூறுகிறது.
காலி மைதானத்தின் ஆடுகளத்தை சரி செய்ய, ஆண்டி அட்கின்சன் அளித்துள்ள பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தமக்கு தெரிவித்த பிறகே, அங்கு அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறும் எனவும் ஐ சி சி கூறியுள்ளது.
போட்டிகளை மேற்பார்வை செய்த ஐ சி சி யின் உயர்மட்ட நடுவர்கள் குழுவின் உறுப்பினரான கிறிஸ் போர்ட் அந்தப் போட்டி குறித்து அளித்த அறிக்கையிலேயே அங்கு ஆடுகளத்தின் தரம் திருப்திகரமாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இதை அடுத்து, அந்த அறிக்கையை பரிசீலித்த ஐ சி சி யின் உயர்மட்டக் குழு, அந்தப் போட்டி குறித்த வீடியோ காட்சிகளைப் பார்த்த பிறகும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கருத்தை பெற்ற பிறகுமே இந்த எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளது.
ஆட்டத்தின் முதல் நாளின் முற்பகுதியிலேயே பந்தின் சுழற்சித் தன்மை மிகக் கூடுதலாக இருந்தது என்பது போன்ற விடயங்கள் போட்டியின் வீடியோவை பார்த்த போது தெளிவாகத் தெரிந்தது என்றும் ஐ சி சி கூறுகிறது.
எனினும் காலி மைதான ஆடுகளத்தின் தரம் மோசமாக உள்ளது என்று முதல் முறையாகக் கூறப்பட்டுள்ளதாலும், அதை தயார் செய்தவருக்கு பந்து வீசுபவர் மற்றும் அதை அடிப்பவருக்கு சமாமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்ததாலும், ஒரு எச்சரிக்கையை நடவடிக்கையாக விடுத்துள்ளோம் எனவும் ஐ சி சியின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
காலி விளையாட்டு மைதானத்தின் ஆடுகளம் குறித்த ஐ சி சி யின் அறிக்கை தமது பார்வைக்கு வந்துள்ளதாகவும், அந்த ஆடுகளத்தை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகிறார் இலங்கை அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமமே
ஆனால், தொடர்ந்து இப்படியான குற்றச்சாட்டுகள் வருமாயின் அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதை நிறுத்தி வைக்கவும் ஐ சி சி க்கும் அதிகாரம் உள்ளது என்றும் அது கூறுகிறது.

0 comments:
Post a Comment