22 December 2011

மனிதர்களிடையே பறவை காய்ச்சல் வைரசை பரப்ப தீவிரவாதிகள் சதி

பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கு இடையே பரவுவது கிடையாது. எனினும் கடந்த 1997ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு அந்த நோய் பரவியதில் 600-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்
இந்த நிலையில் பறவை காய்ச்சல் வைரஸ்(H5N1) மூலமாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
எனவே பறவை காய்ச்சல் தொடர்பான புதிய ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் விபரங்கள் எதையும் வெளியிட வேண்டாம். அவ்வப்போது வெளியாகும் அவற்றை பிரதி எடுத்து புதிய ஆய்வுகளை தீவிரவாதிகள் மேற்கொள்ளக் கூடும் என அமெரிக்காவை சேர்ந்த இரண்டு முக்கிய அறிவியல் ஆய்வு பத்திரிகைகளுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
இதற்கிடையே ஹாங்காங்கில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. ஹாங்காக் நகரில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இறந்த கோழியின் உடலில் H5N1 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே கோழிப்பண்ணையில் உள்ள 17 ஆயிரம் கோழிகளை அழிக்க அரசு உத்தரவிட்டது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பண்ணைகளில் இருந்து உயிருடன் கோழிகளை இறக்குமதி செய்வதை 21 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஹாங்காங் அறிவித்துள்ளது

நன்றி:- நெருடல் இணையம்

0 comments:

Post a Comment