நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் நடிப்பில் சபாஹ் போட வைக்கும் படமாக நண்பன் வெளிவந்துள்ளது. இதுவரை விஜய் நடித்தப் படங்களில் தரமான படம் என்று நண்பனை சொல்லலாம். வழக்கமான விஜய் டச்சப் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம் நண்பன்.
விஜய்யை அளவோடு இன்ச் பை இன்ச் கதையோடு நடிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் சங்கர். இம்மி அளவும் விஜய்க்காக தனது இயக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை, ஷங்கர்.
ஒரிஜினல் படத்தை அப்படியே எடுத்திருந்தாலும் ஆங்காங்கே தனது ஸ்டைலையும் அழகாக புகுத்தியிருக்கிறார்.
மதன் கார்க்கியோடு சேர்ந்து திரைக்கதையில் ஷங்கர் ஒரு புதிய பெயரை பெற்றிருக்கிறார்.
இதுவரை அம்மான்ஜிகளாக படங்களில் வளம் வரும் ஹீரோக்கள் ஜீவாவும், ஸ்ரீகாந்தும் இந்தப் படத்தில் தங்களாலும் நடிக்க முடியும் என்பதற்கான அடையாளத்தை ஆழமாகவே பதித்து இருக்கிறார்கள். சத்யராஜ், சத்யன் ஆகியோரும் தங்கள் பங்கை நிறைவாக நிறையவே செய்திருக்கிறார்கள். அழகிய ராட்சசி இலியானா இதயங்களை திருடுகிறார். ஸ்ரீகாந்த் மனம் விட்டு தன் அப்பாவிடம் பேசும் இடத்தில் பார்ப்பவரின் கண்களை குளம் ஆக்கிவிடுகிறார். ஜீவா ஆஸ்பத்திரியில் சைலன்ஸர் பேசும் அந்த காட்சி தியேட்டரே சிரிப்பு அலைகளால் அதிருகிறது. விஜய்க்கு இலியானா லிப் கிஸ் கொடுக்கும்போது வைரத்தை வெளியே விடு என்று சொல்லும் இடங்களில் எல்லாம் ஷங்கர் தனது முத்திரையை பதித்து இருக்கிறார். மில்லி மீட்டர் சத்யராஜை கெட் அவுட் சார் என்று சொல்லிவிட்டு தள்ளிக்கொண்டு போகும் இடம் டச்சிங். விஜய் அல்லாத ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை நீண்ட நாளைக்கு அப்புறம் பார்த்த திருப்தி. இதற்காக ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். வழக்கம் போல் ஒளிப்பதிவு அவருடைய படங்களில் தரமாகவே இருக்கும். இதிலும் அது அவர் தவறவில்லை. பாடல்கள் பார்க்கும் ரகம்தான். மொத்தத்தில் விஷய/**/ம் இல்லாத படங்களைப் பற்றி பீற்றிக்கொள்ளும் விஜய்க்கு உண்மையிலேயே நண்பன் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது.
அனைத்து தரப்பினரையும் முட்டாளாக்கி 3 மணி நேரம் ஜாலியாக இருக்க வைத்த ஷங்கரை கை குலுக்கு பாராட்டுவோம்.
ஒரே ஒரு குட்டு முதல் பாதியை விட இரண்டாம் பாதி கொஞ்சம் இழுக்கிறது. மற்றபடி த்ரி இடியட்ஸ் இந்தி படத்தைவிட 200 மடங்கு பெட்டராகவே உள்ளது.